அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கிவைத்தார். இந்தப் பேரணியில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர், தொடர்ச்சியான இருமலுக்கு மருத்துவரை அணுக வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் போன்ற விழிப்புணர்வு வசனங்கள் தாங்கிய பதாகைகளுடன் பேரணி தொடங்கியது.