அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (35). இவர் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 27ஆம் தேதி ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு எடுத்து அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருவாரூரில் பரிசோதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சுகாதாரத் துறை அலுவலர்கள் நமங்குணம் கிராமத்தில் வீட்டில் இருந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கிராமத்தைச் சுற்றி சுகாதார பணியையும் மேற்கொண்டனர்.
காவல் துறையினர் நமங்குணம் கிராமத்திற்கு சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் நான்கு பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். தற்போது மேலும் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீட் தேர்வு: மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு செயலர் பரிசீலிக்க உத்தரவு