தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்துறையை சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்பு பணி - Corona infection confirmed

அரியலூர்: செந்துறை நகரை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sendurai sealed Police
Sendurai sealed Police

By

Published : Apr 7, 2020, 4:00 PM IST

செந்துறை பகுதியை சேர்ந்த மூன்று பேர் உள்பட அரியலூர் மாவட்டத்திலிருந்து ஐந்து பேர் கடந்த 22ஆம் தேதி டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற தப்ளிக் இஸ்லாமிய மத போதனை மாநாட்டிற்கு சென்று வந்தனர்.

அவர்களை கடந்த வாரம் சுகாதாரத் துறையினர் அழைத்து சென்று அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமை படுத்தி பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர்களில் செந்துறையை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை‌த் தொடர்ந்து செந்துறை நகரை காவல் துறையினர் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாமலும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் யாரும் வெளியே செல்லாமலும் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் அரியலூர் தலைமை மருத்துவமணையிலிருந்து திருச்சி மருத்துவக் கல்லூரி‌ மருத்துவமணைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் அரியலூர் மாவட்டத்திலிருந்து 30 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு தொற்று இல்லை எனவும் 13 பேரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details