அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள், அது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ஆய்வு மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் - Chief Minister's visit in ariyalur
அரியலூர் : கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளதையடுத்து, ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Consultative meeting ahead of Chief Minister visit in ariyalur
மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும், முடிவடைந்த பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். அது மட்டுமின்றி, பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இந்நிலையில், முதலமைச்சரின் வருகையையொட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 31) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.