அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரத்னா பேசுகையில், "அரியலூர் மாவட்டத்தில் அனைத்து விதமான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 100 படுக்கை வசதிகள் கூடிய சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாள்களை 200ஆக மாற்றப்படும். மாவட்டத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் 238 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் தனிமை படுத்தியுள்ளோம். தற்போது அரசு மருத்துவமனையில் நான்கு பேருக்கு காய்ச்சல் சிகிச்சை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி இருந்தால் மேல் சிகிச்சை எடுக்கப்படும்" என்றார்.