இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைளைக் கண்டறியும் நோக்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தொடங்கி நடந்துவருகிறது. இதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.
அரியலூரில் தொடங்கிய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - CM Trophy Sports Meet in Ariyalur
அரியலூர்: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியர் பலரும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திவருகின்றனர்.
cm-trophy-sports-meet-in-ariyalur
இதில் இன்று கைப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இப்போட்டிகளில் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஆண், பெண் என இருபாலருக்கும் போட்டிகள் தனித்தனியாக நடைபெறுகின்றன.
இதையும் படிங்க:உயரம் தாண்டும் விரிப்பை சரி செய்ய கோரிக்கை