அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு 14ஆயிரத்து 208 பயனாளிகளுக்கு வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 18 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர் வளர்மதி விழாவில் பேசிய அமைச்சர் வளர்மதி, ''அதிமுக அரசு தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு அவர்களின் சொத்து மதிப்பு 50,000 இருந்தால் மட்டுமே முதியோர் உதவித்தொகை பெற முடியும் என்பதை தற்போது ஒரு லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 30ஆயிரத்து 422 மனுக்கள் பெறப்பட்டு அதில் 19 ஆயிரத்து 765 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மறுஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க : நுண்ணுயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து தானிய விதைகளை வழங்கிய அமைச்சர்
!