தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல் துறை - அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : 18 வயது நிரம்பாத கல்லூரி மாணவியின் திருமணத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய-காவல்துறை!
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய-காவல்துறை!

By

Published : Feb 13, 2020, 11:00 PM IST

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில் அதே பகுதியினை சேர்ந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து அரியலூர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய-காவல்துறை!

இவர்களின் திருமண ஏற்பாடுகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மாணவிக்கு 18 வயது தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரசவத்தின் போது உயிரிழந்த தாய், குழந்தை - கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details