தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை - ஸ்டாலின்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திவருகிறார்.

Chief Minister MK stalin Consulting about Lockdown  Lockdown  stalin  consultative meeting  Chief Minister mk stalin Consulting about Lockdown  Chief Minister mk stalin  கூடுதல் தளர்வுகள்  ஊரடங்கு கூடுதல் தளர்வுகள்  ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசனை  அலோசனைக் கூட்டம்  ஸ்டாலின்  முதலமைச்சர் ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Oct 23, 2021, 12:20 PM IST

தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.23) ஆலோசனை மேற்கொள்கிறார்.

தற்போது தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்புகள் 200க்கும் கீழ் குறைவதால், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கடை தெருக்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும், இக்கூட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், அதன் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மெகா பேரணி.. காஷ்மீர் செல்லும் அமித் ஷா... பாதுகாப்பு தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details