தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமரிசையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் - திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூர்: செந்துறை அருகே அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்
திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்

By

Published : Mar 14, 2020, 10:08 AM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குறிச்சிக்குளம் கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் திருவிழா பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவில் முக்கிய நாளான நேற்று சுவாமிக்கு மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான வாசனைப்பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர், மாலை 6 மணியளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். நாதஸ்வரம் இசைக்க, செண்டை மேளம் முழங்க, வானவேடிக்கைகளுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்

தேர் செல்லும் அனைத்து வீதிகளிலும் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர். இந்தத் தேர் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மாசிக் குண்டத் திருவிழா: 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக் கடன்!

ABOUT THE AUTHOR

...view details