அரியலூா் மாவட்டம் பொய்யாதநல்லூா் அருகே ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், இப்பகுதியில் உள்ள கோயில்களில் மிகவும் விஷேசமான ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டி யாகம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில் இதையடுத்து, இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு புத்திர தோஷம், கண் திருஷ்டி, திருமண தடை, பில்லி சூனியம், தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட சகல தோஷங்கள் நீங்குகிறது என்பது நம்பிக்கை. அமாவாசையான நேற்று வழக்கம்போல் கோயிலில் சண்டி யாகம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் யாகத்தில் முக்கனிகளான மா, பலா, வாழை உள்ளிட்ட பல வகையான பழங்கள், நவ தானியங்கள், சேலைகள் ஆகியவை யாகத்தில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல மூட்டை மிளகாய் யாகத்தில் கொட்டப்பட்டது. அவ்வாறு யாகத்தில் மிளகாய் கொட்டப்படும்போது எந்தவொரு கார நெடியும் ஏற்ப்படுவதில்லை என்பதே இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
மேலும், ஆடி அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்த தினம் என்பதால் அருகிலுள்ள கிராமங்கள், மாவட்டங்களிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். பின்னர் அம்மனை வழிபட வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.