அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள மாத்தூர் பேருந்து நிலையத்தில் மாட்டு வண்டி உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டியில் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இது குறித்து மாட்டுவண்டி உரிமையாளர்கள் கூறுகையில், "தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வருமானம் இன்றி உணவிற்கே வழியில்லாமல் தவித்து வருகிறோம். இதனால் எங்களது மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.