அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரம் அருகே உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு இன்று (பிப். 8) கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
மாசிமக பிரம்மோற்சவம்
இதில் அறநிலையத்துறை அலுவலர்கள், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும்.
கொடியேற்றத்துடன் தொடக்கம்
வருகின்ற 17ஆம் தேதி சுவாமி வீதியுலாவும் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (பிப்.6) விநாயகருக்கு சிறப்புப்பூஜை நடைபெற்றது.
இதையும் படிங்க:கோயில் வாசலில் கிடந்த காளியம்மன் சிலை - போலீஸ் விசாரணை