அரியலூர்: வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் நலன் கருதி வரும் 17ஆம் தேதி அரியலூர் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 17.03.2023 அன்று (வெள்ளிக்கிழமை) அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் (காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை) நடைபெற உள்ளது.
இம்முகாமில் (5 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண்/பெண் (இருபாலரும்) திரளாக கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.