தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு - நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்!

அரியலூர் : 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற செயலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு

By

Published : Oct 22, 2020, 8:23 PM IST

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட உஞ்சினி கிராமத்தில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு தெரியாமல் பணிகள் நடந்ததாகவும், ஊராட்சிமன்ற செயலர் பணம் பெற்றதாகவும் கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி மதன், சேர்மன் தேன்மொழி சாமிதுரை, காவல் ஆய்வாளர் ரஞ்சனா ஆகியோர் அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உஞ்சினி கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிப்பதாகக் கூறி மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊராட்சி செயலர் பணம் பெற்றுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் பணிகளை ஊராட்சி மன்ற செயலாளர் வழங்கி வருகிறார் என்றும், ஆதிதிராவிடர், ஏழை எளிய மக்களுக்கு பணிகள் வழங்கபடுவதில்லை என்றும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றும் பணிகளை செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details