அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன்பு ஏஐடியுசி தூய்மைப் பணியாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட துணை செயலாளர் தம்பிசிவம் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்! - ariyalur latest news
அரியலூர்: கரோனா தொற்றால் உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக உள்ள ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா தொற்றால் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், கரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து பணி செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களின் முயற்சியால் குப்பை இல்லா நகரமான அம்பிகாபூர்!