அரியலூா் மாவட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல், தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, தனியார்மயமான பொதுத் துறை, கடுமையான விலைவாசி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன.
முழு வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் தொழிலாளா்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.