தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருஷ்டி பூசணிக்காய் அறுவடை செய்யும் பணி தீவிரம்! - ariyalur latest news

அரியலூர்: ஆயுத பூஜை நெருங்கி வருவதால் செந்துறை பகுதியில் வெள்ளை பூசணி எனப்படும் திருஷ்டி பூசணிக்காய் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

pumkin_sales
pumkin_sales

By

Published : Oct 24, 2020, 11:53 AM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள செந்துறை, ராயம்புரம், சென்னிவனம், மேட்டுப்பாளையம் காவேரி பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளை பூசணிக்காய் எனப்படும் திருஷ்டி பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது காய் முற்றிய நிலையில் உள்ளதால் சாகுபடி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

திருஷ்டி பூசணிக்காய் அறுவடை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆயுதபூஜைக்காக இந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம், சென்னிவனம், மேட்டுப்பாளையம், காவேரி பாளையம், போன்ற பகுதிகளில் பூசணிக்காய் அறுவடை செய்து வாகனங்களில் ஏற்றி சென்னை, பெங்களூரு, மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details