அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோயிலாகும்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி - பிரகதீஸ்வரர் கோயில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
அரியலூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
![மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி nattiyanjali](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6159832-thumbnail-3x2-01.jpg)
nattiyanjali
இக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் பெங்களூரு, சென்னை, கடலூர், நாகை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி
இதையும் படிங்க:’காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்தான் காமகோடி சக்தி பீடம்’