அரியலூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் காவலர் அன்புராஜ். இவர் மோப்பநாய்ப் பிரிவில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், அன்புராஜுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அரியலூரில் காவலருக்கு கரோனா உறுதி: மருத்துவமனையில் அனுமதி! - போலீஸ் கரோனா உறுதி
அரியலூர்: மோப்ப நாய்ப் பிரிவு காவலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Ariyalur police corona confirmed
இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக திருச்சி கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதைத் தொடர்ந்து அவருடன் பணிபுரிபவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரத்தப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. பின்னர் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
புதிய காவலர் குடியிருப்பு
இதையும் படிங்க:'மதயானைக் கூட்டம் ஓவியா ராகிங் காட்சி' போல் வாகன ஓட்டிகளுக்கு தண்டனை!