அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே பெரியமறை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அலர்மேல்மங்க சமேதய ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் சப்ததின பிரமோத்ஸவ விழா நடைபெற்றது.
இவ்விழா கடந்த 13ஆம் தேதி காலை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை காலை, மாலை இருவேலையும், சுவாமிகள், பன்னாங்கு பல்லாக்கு, அன்னபட்சி, சிம்ம வாகனம், யானை, கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா மற்றும் ஏகாந்த திருமஞ்சனம், சாற்றுமறை நடைபெற்றது.