கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி உத்தரவின் பேரில், நாடு முழுவதும் இன்று ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கரோனா தாக்குதலையும் பொருட்படுத்தாமல் மக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவும் பாராட்டும் தெரிவிப்பதற்காக இன்று மாலை பொதுமக்கள் அனைவரும் ஐந்து மணிக்கு குடும்பத்துடன் கை தட்டும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அரியலூரில் மருத்துவர்களுக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்த பொதுமக்கள் - Ariyalur People Claps
அரியலூர்: கரோனாவுக்கு எதிராக அயராது உழைக்கும் மருத்துவர்களுக்காக கை தட்டி பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Ariyalur People Claps
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் மீனாட்சி நகர்ப் பகுதியில் பொதுமக்கள் இன்று மாலை கை தட்டி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் துணை ஆய்வாளர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:பத்து வயது சிறுமி கொலை - இளைஞர் கைது!