அரியலூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆர்.சி. மேரி உயர்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்றுவருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 2000-2001ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது அரசு, தனியார் துறைகளில் பணியாற்றக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தங்கள் நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
அதேபோல், கடந்த இருபது ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், இன்ப, துன்பங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொண்டனர்.