அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு அலுவலர்கள் தங்களது வாக்குகளை வாங்க வந்தனர். அப்போது வாக்கு சீட்டுகள் வழங்க தேர்தல் அலுவலர்கள் மறுத்தனர். இதனையடுத்து, வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி ஆண்டிமடம் சாலையில் போக்குவரத்தை மறித்து அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தபால் வாக்களிக்க மறுப்பு: அரசு அலுவலர்கள் சாலைமறியல் - அரியலூரில் தபால் ஓட்டு போட மறுத்த அதிகாரி
அரியலூர்: தபால் வாக்குகளை வாங்க வந்தபோது வாக்குச் சீட்டு வழங்க தேர்தல் அலுவலர்கள் மறுத்ததால் அரசு அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
protest
இதனால், ஆண்டிமடம் - ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் வாக்குச் சீட்டு தர மறுத்த தேர்தல் அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்