தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் நகராட்சி ஆணையருக்கு கரோனா - அரியலூர் நகராட்சி மூடல்

அரியலூர் : ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

municipal office
municipal office

By

Published : Aug 27, 2020, 11:12 PM IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்விக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டு, கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.

மேலும் நகராட்சியில் பணிபுரிபவர்கள், ஆணையருடன் தொடர்புடையவர்கள் தங்களுக்கு காய்ச்சல் அல்லது ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரதுறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதேபோல் அலுவலகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அனகாபுத்தூர் நகராட்சி ஆணையருக்குக் கரோனா - பணியாளர்களுக்குப் பரிசோதனை

ABOUT THE AUTHOR

...view details