அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓட்டக்கோவில் ஊராட்சியில் செங்கமலை என்பவர் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது செங்கமலை சுமார் 200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செங்கமலை தனது ஆதரவாளர்கள், உறவினர்களுடன் ஓட்டக்கோவில் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.