தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் உள்ளாட்சித் தேர்தல்: 5,483 வேட்பாளர்கள் போட்டி! - அரியலூர் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள்

அரியலூர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஐந்தாயிரத்து 483 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ariyalur  collector
ariyalur collector

By

Published : Dec 21, 2019, 4:42 AM IST

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது மாவட்ட ஆட்சியர் ரத்னா பேசுகையில், ‘அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி இடங்களுக்கு 58 வேட்பாளர்களும், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் 461 வேட்பாளர்களும், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கு 769 வேட்பாளர்களும், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 4,191 வேட்பாளர்களும் போட்டி இடுகின்றனர்.

அரியலூர் ஆட்சியர் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஒருவரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு நான்கு பேரும், கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 233 நபர்கள் என மொத்தம் 238 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்திலுள்ள 1,017 வாக்குச்சாவடிகளில் 400 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க: உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு திமுகதான் காரணம் - அமைச்சர் குற்றச்சாட்டு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details