அரியலூர் செந்துறை ரோடு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் வாசுகி. இவர் தனது இளைய சகோதரர் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சிதம்பரம் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்டு அறிந்துகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 20 சவரன் நகை, ரூ. 4.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மிளகாய்ப்பொடி தூவி 20 சவரன் நகை திருட்டு - அரியலூரில் 20 சவரன் நகை திருட்டு
அரியலூர்: சினிமா பாணியில் வீட்டில் மிளகாய்ப்பொடி தூவி 20 சவரன் நகை, ரூ. 4.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருட்டு
அரியலூரில் நகை கொள்ளை
மேலும், சினிமா பாணியில் வீடு முழுவதும் மிளகாய்ப்பொடியை தூவிச் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய வாசுகி நகை, பணம் திருடுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடரும் பைக் திருட்டால் வேலூரில் பரபரப்பு - சிசிடிவி காட்சிகள்!