தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 370 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 355 பேர் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 15 பேரும் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (ஜூன் 2) அரியலூர் நகராட்சி மூலம் மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு - Disinfectant sprayed in Ariyalur hospital
அரியலூரில் 15 பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
![அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு Ariyalur hospital premises sprayed with disinfectant](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:54-tn-ari-02-gh-mass-cleaning-vis-scr-7206095mp4-02062020214731-0206f-1591114651-379.jpg)
Ariyalur hospital premises sprayed with disinfectant
மருத்துவமனை வளாகம், வைரஸ் ஆய்வகம், நோயாளிகள் தங்கியிருக்கும் இடம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.