நக்கம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் வருடம்தோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இதனையடுத்து இவ்வருடமும் மீன்பிடி திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தர்கள் முடிவுசெய்து அதன்படி இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இதில் செந்துறை சொக்கநாதபுரம்,வஞ்சினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்.
அரியலூரில் மீன்பிடி திருவிழா சமூக இடைவெளி இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குவிந்திருந்த பொதுமக்களை கலைந்து போகச் வலியுறுத்தினர். 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவே அனைவரும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க:வாத்தை கவ்விச் சென்ற சிறுத்தை - சிசிடிவி காட்சி