அரியலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது, அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, காவிரி உபரி நீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை தற்போது விவசாயிகள் அறுவடை செய்துவருகின்றனர். அதற்கு கொள்முதல் நிலையங்கள் அமைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். இதற்கு வேளாண்மை அலுவலர்கள் மனு கொடுங்கள் என கூறினர்.