அரியலூர் மாவட்டம் கீழப்பலூரில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு 120 விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதில் ஒரே ஊரில் ஒரே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு சதுரடி ரூ.180 எனவும், மற்றொருவருக்கு சதுரடி ரூ. 1,600 எனவும், வேறு ஒருவருக்கு ரூ.2,200 எனவும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த நிலம் கொடுத்த விவசாயிகள், அப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டுமான பணிகளைத் தடுத்து நிறுத்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.