அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயியான இவர், திண்டிவனம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மின்சாரம் சரியாக வரவில்லை என்பதால் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அரியலூரில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்! - ariyalur latest news
அரியலூர்: மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சரி செய்யும்போது, மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினர், விஜயகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் யாரும் மின்கம்பத்தில் ஏறி தங்களது உயிரையிழக்க வேண்டாம் எனவும் மின்கம்பத்தில் ஏறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை, மின்சார வாரியத்து அலுவலர்களும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க:வெடிகுண்டு வீசி காவலர் உயிரிழப்பு -ரவுடியின் உடல் அரிவாளுடன் அடக்கம்!