அரியலூர் மாவட்டத்தில் ஆறு தனியார் சிமென்ட் ஆலைகளும் ஒரு அரசு சிமென்ட் ஆலையும் அமைந்துள்ளது. ஆலைகளுக்குத் தேவையான கச்சா பொருட்கள், ஜிப்சம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியன லாரிகள் மூலம் புறவழிச் சாலை வழியாக எடுத்து செல்லப்படுகிறது. சில நேரங்களில் இந்த லாரிகளினால் அப்பகுதியில் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்த விபத்துகளுக்கு காரணமானவரை அறிவதற்கும் அப்பகுதியில் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் புறவழிச்சாலையில் சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக ஆலை நிர்வாகத்துடன் காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.