அரியலூர்:புத்தம் புதிய ஸ்டவ் அடுப்பு வாங்கிய அன்றே குபீர் என்று தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வசந்த் அண்ட் கோ நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனம்பாக்கம் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் குமாரசாமி. இவர் சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'கடந்த 17.03.2017 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் சன் ஃபிளேம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று பர்னர்கள் கொண்ட கண்ணாடி மூடியுடன் கூடிய கேஸ் ஸ்டவ் ஒன்றை ரூ.13 ஆயிரத்து 500க்கு வாங்கினேன்.
இந்த கேஸ் ஸ்டவ்வை சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் சர்வேஷ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சர்வீஸ் பிரதிநிதிகள் 20ஆம் தேதி அன்று எங்கள் வீட்டில் பொருத்தினர். 21ஆம் தேதி காலையில் ஸ்டவ்வை பற்ற வைத்த போது, குபீர் என்று தீப்பிடித்து சிலிண்டர் வரை தீ சென்றது. உடனடியாக ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு இதுகுறித்து சர்வேஷ் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து பரிசோதனை செய்துவிட்டு சரியாக உள்ளது என்று கூறிவிட்டுச் சென்றனர்.
21ஆம் தேதி காலையில் மீண்டும் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது, திரும்பவும் விபத்து ஏற்பட்டது. எனவே, பழுதான நிலையில் இருக்கும் இந்த ஸ்டவ்வால் எங்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. அடுப்பை மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், டியூப் தான் எரிந்து இருக்கிறது என்று கூறிய சர்வேஷ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சரி செய்து தருவதாக கூறியது.