அரியலூர் மாவட்டத்திலுள்ள இலையூர், அருங்கால், வாரணவாசி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் 400ஐ எட்டிய கரோனா பாதிப்பு - அரியலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியது.
![அரியலூரில் 400ஐ எட்டிய கரோனா பாதிப்பு Ariyalur district Corona cases](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7677250-538-7677250-1592531307360.jpg)
இவர்கள் மூவரும் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 21, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சென்னையில் தலா ஒருவர் என 25 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தற்போது அரியலூர் மாவட்டத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. இதில் 375 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.