அரியலூர்:அரசு நடத்தும் இலவச பயிற்சி வகுப்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (பிப்.4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக https://tamilnaducareerservices.tn.gov.in மற்றும் Youtube Channel இணையதளம் https://www.youtube.com/c/TNCareerServices Employment உருவாக்கப்பட்டுள்ளது. மேற்காணும் இணையதளம் மற்றும் Youtube Channel-லில் TNPSC, TNUSRB, IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
இப்பணிக்காலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு, வயது வரம்பு 18 முதல் 27 வரை பிரிவினருக்கு 3 வருடங்களும் SC, ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. மேற்காணும் பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள இளைஞர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி 17.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.