தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா? உடனே கால் பண்ணுங்க - அரியலூர் கலெக்டர் - பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கலையா

அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள குறைகள் குறித்து புகார் அளிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி புகார் எண்களை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 8, 2023, 8:38 PM IST

அரியலூர்:பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் புகார்கள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ள அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, இது குறித்த கண்காணிப்பு அலுவலர்களின் தொலைபேசி எண்களையும் இன்று (ஜன.8) வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை (Pongal) சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக (TN Govt Pongal Gift 2023) வழங்கப்பட உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 465 நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில், நடைமுறையில் உள்ள 2,46,210 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில், பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் மற்றும் மின்னணு குடும்ப அட்டையை எடுத்துக்கொண்டு பொருட்கள் பெற்றுச்செல்ல நியாய விலைக் கடைக்கு வரவேண்டும். நியாய விலைக்கடையில் ஆண்கள் தனி வரிசையாகவும், பெண்கள் தனி வரிசையாக நிற்க வேண்டும்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே தங்களுடைய நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும். பொங்கல் பரிசு 9ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளுக்கு 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் இருப்பின் வட்ட அளவில்,
  • அரியலூர் வட்டத்தில் அரியலூர் வட்ட வழங்கல் அலுவலர் - 9445000274,
  • உடையார்பாளையம் வட்டத்தில் உடையார்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர் - 9445000275,
  • செந்துறை வட்டத்தில் செந்துறை வட்ட வழங்கல் அலுவலர் - 9445000276,
  • ஆண்டிமடம் வட்டத்தில் ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் - 9499937027 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

வட்டார அளவில் அரியலூர் வட்டாரத்தில்,

  • அரியலூர் கூட்டுறவு சார்பதிவாளரின் 9443180786,
  • திருமானூர் வட்டாரத்தில், திருமானூர் கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர் - 9786605942,
  • ஜெயங்கொண்டம் வட்டாரத்தில், ஜெயங்கொண்டம் கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர் - 7904104200,
  • தா.பழூர் வட்டாரத்தில், தா.பழூர் கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர் - 9894482727,
  • செந்துறை வட்டாரத்தில், செந்துறை கூட்டுறவு சார்பதிவாளர் - 9444402394,
  • ஆண்டிமடம் வட்டாரத்தில், ஆண்டிமடம் கூட்டுறவு சார்பதிவாளர் - 9597870496 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
  • மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களுக்கும் புகார்களை தெரிவிக்கலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும் தகுதியான நபர்களுக்கு தரமானப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திலும் மாவட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையிலும், வட்டார அளவில் வட்டாட்சியர் மற்றும் உதவி இயக்குநர் நிலையிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் விவரம் பின்வருமாறு,

  • அரியலூர் வட்டாரத்திற்கு, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் - 9445000459,
  • திருமானூர் வட்டாரத்திற்கு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் - 9445796402,
  • ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் - 9445000460,
  • தா.பழூர் வட்டாரத்திற்கு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) - 9486601773,
  • செந்துறை வட்டாரத்திற்கு, அரியலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் - 9445461730
  • ஆண்டிமடம் வட்டாரத்திற்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் - 7338801252,
  • அரியலூர் வட்டாரத்திற்கு, அரியலூர் வட்டாட்சியர் - 9445000613,
  • திருமானூர் வட்டாரத்திற்கு, அரியலூர் உதவி இயக்குநர்(வேளாண்மை) - 9443180884,
  • ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு, உடையார்பாளையம் வட்டாட்சியர் - 9445000614,
  • தா.பழூர் வட்டாரத்திற்கு, தா.பழூர் உதவி இயக்குநர்(வேளாண்மை) - 9626650287,
  • செந்துறை வட்டாரத்திற்கு, செந்துறை வட்டாட்சியர் - 9445000615,
  • ஆண்டிமடம் வட்டாரத்திற்கு, ஆண்டிமடம் வட்டாட்சியர் - 9789615383 ஆகிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் ஏதேனுமிருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக 04329-228321 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு என்றும் சொல்லலாம் தமிழகம் என்றும் சொல்லலாம் - நடிகை குஷ்பு

ABOUT THE AUTHOR

...view details