தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - அரியலூர் ஆட்சியர் - தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருது

தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆட்சியர் அலுவலகத்தை நாட அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 7, 2023, 3:34 PM IST

அரியலூர்:தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில் "தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு தமிழ் நாடு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள் (அமைப்புகள்), கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு , தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அரியலூர் என்ற முகவரியில் அணுகலாம். மேலும், தமிழ் நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023 ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி - மேற்கு வங்க அரசு அதிரடி திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details