கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பல்வேறு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாகவும் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் எட்டு மணி நேரம் பணிபுரிந்துவருகின்றனர்.
இவர்கள், வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தி, கண்காணித்துவருகின்றனர். மேலும், வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் பணிகளையும் ஒருங்கிணைத்துவருகின்றனர்.