வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் இம்மாத இறுதியில் தமிழ்நாட்டைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து துறைகளின் அதிகாரிகளுக்கும் புயலால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பொதுப்பணித்துறை சார்பில் போதுமான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும், மின்சாரத் துறை சார்பில் போதுமான மின் கம்பங்கள் மற்றும் மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மின்சாரம் பாதிப்பால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.