அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஆளுநர் பாதுகாப்பு... அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
அரியலூர்: தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்க உள்ள புத்தகத் திருவிழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 110 அரங்கங்கள் அமைத்து, அதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தல் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து நிகழ்ச்சியில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் ஆய்வு செய்தார். அதில் ஆளுநர் பாதுகாப்பு நடவடிக்கை ஏற்பாடு, புத்தகத் திருவிழாவிற்கு வரும் வாகனங்கள் எங்கே நிறுத்தப்பட வேண்டும், நிகழ்ச்சி நிரல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.