தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது தீமைக் குறித்த ஆடல், பாடல்... போலீஸ் விழிப்புணர்வு - அரியலூர் மது விழிப்புணர்வு

அரியலூர்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தயில் நடத்தப்பட்டது.

ariyalur anti liquor awareness cultural program
மது தீமைக் குறித்த ஆடல், பாடல்... போலீஸ் விழிப்புணர்வு

By

Published : Feb 26, 2020, 11:00 AM IST

தமிழ்நாடு அரசு கலால் ஆயத்தீர்வை துறை சார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அரியலூரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், தேரடி, செந்துறை ஈரோடு கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

கலை நிகழ்ச்சிகளில் மதுவினால் ஏற்படும் தீமைகள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மதுகுடிப்பதால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை நாடகங்களாகவு, நடனம், பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கலால் ஆயத்தீர்வை வட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மது தீமைக் குறித்த ஆடல், பாடல்... போலீஸ் விழிப்புணர்வு

இதையும் படிங்க:வழக்கறிஞர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் பயிற்சி வழக்கறிஞர் - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details