ஆடிப்பெருக்கை முன்னிட்டு அரியலூர் கவரை பகுதியிலுள்ள ஸ்ரீ தேச மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற மாரியம்மனுக்கு பால்குடம் எடுப்பது வழக்கம்.
அரியலூரில் ஆடிப்பெருக்கு கோலாகலம்! - நேர்த்திக்கடன்
அரியலூர்: ஸ்ரீ தேச மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அப்பகுதி மக்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அரியலூரில் ஆடிப்பெருக்கு கோலாகலம்!
அதேபோல இந்த வருடம் அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் அம்மனுக்கு பூஜை செய்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்கிருந்து தீச்சட்டி ஏந்தியும் பால் குடம் எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றனர்.
பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் ஸ்ரீ தேச மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு நடைபெற்ற தீபாராதனையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.