அரியலூர்:அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 18.04.2022 (திங்கட்கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’அரியலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும், இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கெனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.