அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று 100 மூட்டை அன்னத்தை வடித்து, சாதத்தை உலர வைத்து கூடைகளில் எடுத்துக் கொண்டு, அதனை 13 அரை அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரருக்கு கொட்டி அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
அன்னாபிஷேகத்தின் போது சிவனை வழிபட்டால் ஒவ்வொரு பருக்கையும் சிவனாக கருதப்பட்டு, லட்சக்கணக்கான சிவனை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும். இந்நிகழ்ச்சியானது இன்று கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.