அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்து உள்ள உகந்தநாயகன் குடிக்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது. இந்த அங்கன்வாடியில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்றுவருகிறார்கள்.
இந்நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தில் இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் மது அருந்துவதும், மலம் கழிப்பதும், குப்பைகளைக் கொட்டுவதும் போன்ற செயல்களைச் செய்துவருகிறார்கள்.
அரியலூர் அங்கன்வாடி மையம் இதுகுறித்து, அவர்களிடம் கேட்டால், இந்த இடம் எங்களுக்கு உரிமையான இடம் எனக் கூறிவருகின்றனர். எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தினையும், அதனைச் சுற்றியுள்ள இடத்தையும் மீட்டு சுத்தமாக்கித்தர வேண்டும் என்றும், அங்கன்வாடி மைய கட்டடத்தின் சுவர்களின் பழுதுகளைச் சரிசெய்து தர வேண்டும் எனவும், குடிநீர், மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டும் எனப் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் சிஏஏவை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்