அரியலூர்: இந்திய ரயில்வேயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் தெற்கு ரயில்வேயின் கீழ் ஆறு கோட்டங்கள் இயங்குகின்றன. இதில் மொத்தம் 1,322 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஆண்டுக்கு 80 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். தெற்கு ரயில்வே எல்லையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்கள் அடங்கியுள்ளன.
இந்த நிலையில், "அம்ரித் பாரத் ஸ்டேஷன் ஸ்கீம்" என்ற திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தெற்கு ரயில்வேயின்கீழ் இயங்கும் 73 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் நவீன மயமாக்குதல், தரம் உயர்த்துதல், பயணிகளின் தேவைக்கேற்ற அனைத்து விரைவு சேவை வசதிகளை ஏற்படுத்துதல், ரயில் நிலைய பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 73 ரயில் நிலையங்கள்:
- அம்பாசமுத்திரம்
- அம்பத்தூர்
- அரக்கோணம்
- அரியலூர்
- ஆவடி
- பொம்மிடி
- செங்கல்பட்டு
- சென்னை கடற்கரை
- சென்னை எழும்பூர்
- சென்னை பார்க் டவுன்
- சிதம்பரம்
- சின்ன சேலம்
- கோவை சந்திப்பு
- கோவை வடக்கு
- குன்னூர்
- தருமபுரி
- சென்னை சென்ட்ரல்
- ஈரோடு
- கூடுவாஞ்சேரி
- கிண்டி
- கும்மிடிப்பூண்டி
- ஓசூர்
- ஜோலார்பேட்டை
- கன்னியாகுமரி
- காரைக்குடி
- கரூர்
- காட்பாடி
- கோயில்பட்டி
- குளித்தலை
- கும்பகோணம்
- லால்குடி
- மதுரை
- மாம்பலம்
- மணப்பாறை
- மயிலாடுதுறை
- மேட்டுப்பாளையம்
- மொரப்பூர்
- நாகர்கோயில்
- நாமக்கல்
- பரமக்குடி
- சென்னை பெரம்பூர்
- போத்தனூர்
- பொள்ளாச்சி
- போளூர்
- புதுக்கோட்டை
- ராஜபாளையம்
- ராமநாதபுரம்
- ராமேஸ்வரம்
- சேலம்
- சாமல்பட்டி
- சோழவந்தான்
- ஸ்ரீரங்கம்
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- சென்னை பரங்கிமலை
- சென்னை தாம்பரம்
- தென்காசி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- திருச்செந்தூர்
- திருநெல்வேலி
- கடலூர்
- திருப்பாதிரிப்புலியூர்
- திருப்பத்தூர்
- திருத்தணி
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- உதகமண்டலம்
- வேலூர் கன்டோமென்ட்
- விழுப்புரம்
- விருதுநகர்
- விருத்தாசலம்
இதையும் படிங்க: ஜப்பானில் புற்றுநோய் கண்டறிதல் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு!