தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பயணிகள் ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர், முதல் உதவி பெட்டி" - ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை! - ரயில்வே அமைச்சகம் உத்தரவு

இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர், உயிர் காக்கும் உபகரணங்கள் - மருந்துகள் அடங்கிய முதல் உதவி பெட்டி இணைக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

All
All

By

Published : Feb 16, 2023, 1:17 PM IST

அரியலூர்:ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே பிரிவு நிர்வாகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் முதல் உதவி பெட்டி இணக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் உதவி பெட்டி குறித்த பல்வேறு பரிந்துரைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அனைத்து ரயில்வே பிரிவு நிர்வாகங்களுக்கும் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

  • இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர், உயிர் காக்கும் உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய முதல் உதவி பெட்டி இணைக்கப்பட வேண்டும். பயிற்சி பெற்ற மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியில் இருத்தல் வேண்டும்.
  • பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும், அந்த ரயில் நிலையத்தை சுற்றி உள்ள தூரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையின் விவரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  • ரயில் நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகள்- அதன் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்களை அந்தந்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில் ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு நிலைய சேவை போன்ற இதர விவரங்களையும், அந்தந்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் விரல் நுனியனவில் வைத்திருக்க வேண்டும்.
  • பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் பட்டியல் குறித்தும், அவர்களின் செல்போன் எண்கள் குறித்தும், டிடிஆர் விவரம் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
  • அவசர காலங்களில் முதல் உதவி பெட்டியில் உள்ள உபகரணங்கள், மருந்து, மாத்திரைகளை ரயில்களில் பயணிக்கும் மருத்துவர்கள் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது அல்லது நோயாளிகளை இதர மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளை அந்தந்த ரயில்வே நிர்வாகங்கள் செய்ய வேண்டும்.
  • பயணிகள் ரயில்களில் பணியில் உள்ள டிடிஆர், பாதுகாவலர், சூப்பிரண்டு, ஸ்டேஷன் மாஸ்டர் போன்றவர்களுக்கு முதலுதவி சம்பந்தமான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அந்த பயிற்சிகளை அவர்கள் கண்டிப்பாக பெற வேண்டும்.
  • பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் முதலுதவி பெட்டி தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details