வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி அரியலூர் மாவட்டத்தில் தாமரைகுளம், ஓட்டக்கோவில், அம்மா குளம் உள்ளிட்ட இடங்களில் மக்காச்சோளம், கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடி பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 43 லட்சம் ஹெக்டேரில் 50 விழுக்காடு தற்போது சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 80 விழுக்காடும், தஞ்சாவூரில் 50 விழுக்காடும் சம்பா நடவு பணிகள் நிறைவுற்றது.